காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் 16 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சீர்காழியில், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ்(வயது 48) மற்றும் அந்த கட்சியை சேர்ந்த சீர்காழி நந்தியநல்லூர் கிராமத்தை சேர்ந்த குமார்(44), திருக்கோலக்கா பகுதியை சேர்ந்த பிரபாகரன்(35), அருண்ராஜ்(34), ஸ்ரீதர்(38), பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த பாலாஜி(20) ஆகிய 6 பேரும் சீர்காழி பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தின் மீது ஏறினர்.
பின்னர் அவர்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக அந்த கட்சியினர் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், சீர்காழி இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய 6 பேரை கீழே இறங்கி வருமாறு கூறினர். இதனையடுத்து அவர்கள் கீழே இறங்கி வந்தனர். இதனை தொடர்ந்து செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.