கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகள் வராததை கண்டித்து போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகள் வராததை கண்டித்து வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லம்பள்ளி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது எட்டிமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இந்த கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 26-ம் தேதி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற மனு தாக்கல் பரிசீலனையில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. நேற்று கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. அலுவலகம் திறக்கப்படாமல் இருந்ததால், ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைமறியல்
நல்லம்பள்ளி அடுத்துள்ள என்.எஸ்.ரெட்டியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்களை நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்து, தகுதியுடைய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதாக இருந்தது. ஆனால் அதிகாரிகள் வேட்பாளர்கள் பட்டியலை மாலை 5 மணியாகியும் வெளியிடவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு உள்ள தர்மபுரி - வத்தல்மலை செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி மற்றும் அதியமான்கோட்டை போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த வேட்பாளர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
27 பேர் கைது
பாலக்கோடு அருகே உள்ள செக்கோடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில் போட்டியிட 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பாளர்களின் மனுக்களை பரிசீலனை செய்யும் நாளான நேற்று தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வேட்பாளர்கள் பாப்பாரப்பட்டி - தர்மபுரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. ஒன்றிய செயலாளர் குட்டி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நடராஜ், ம.தி.மு.க. முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குமரவேல், பூவன், கிருஷ்ணன் உள்ளிட்ட 27 பேரை பாப்பாரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
பாப்பாரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சில்லாரஅள்ளி, சுங்காரஅள்ளி, பொ.துரிஞ்சிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி மற்றும் வாசிகவுண்டனூர் ஆகிய சங்கங்களில் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரிகள் வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதையொட்டி கூட்டுறவு சங்க அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதற்கிடையே பாப்பிரெட்டிப்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டுறவு சங்க தேர்தல் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.