அதிகரட்டியில் கூட்டுறவு சங்க தேர்தல்: அ.தி.மு.க.- அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு
அதிகரட்டியில் கூட்டுறவு சங்க தேர்தலின்போது அ.தி.மு.க.வினர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குன்னூர்,
குன்னூர் அருகே அதிகரட்டியில் வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் மொத்தம் 1,578 பேர் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில் கூட்டுறவு சங்க நிர்வாக குழுவுக்கு 11 பேர் கொண்ட உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க.வில் 11 பேரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 11 பேரும், 4 பேர் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்து இருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அதிகரட்டியில் வேளாண்மை தொடக்க கூட்டுறவு சங்கத்தில் வாக்குப்பதிவு நடந்து கொண்டு இருந்தது. அப்போது வாக்குச்சாவடி முன்பு அ.தி.மு.க.வினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் திரண்டு இருந்தனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.
இதை பார்த்த அ.தி.மு.க.வினர் அவர்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல எப்படி அனுமதிக்கலாம் என்று கூறி போலீசார் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அ.தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்துக்கு பின் இருதரப்பினரையும் போலீசார் வெளியே அழைத்து வந்தனர். அப்போது இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.