லாத்தூரில் ரெயில் பெட்டி தொழிற்சாலை

லாத்தூரில் ரெயில்பெட்டி தொழிற்சாலை அமைக் கும் திட்டத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அடிக்கல் நாட்டினார்.

Update: 2018-04-01 23:51 GMT
லாத்தூர்,

லாத்தூர் புறநகர் பகுதியான ஹரங்கல் புத்ரக் கிராமத்தில் மத்திய-மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைகிறது. இந்த திட்டத்துக்கான பணிகளை நேற்று முன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். விழா மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் முன்னிலையில் நடந்தது.

விழாவில் மராட்டிய தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி சாம்பாஜி பாட்டீல் நிலேங்கேகர், பெண்கள் நலவாழ்வுத்துறை மந்திரி பங்கஜா முண்டே, சுனில் கெய்க்வாட் எம்.பி., அமித் தேஷ்முக் எம்.எல்.ஏ., நகர மேயர் சுரேஷ் பவார் ஆகியோர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மழை நீர் சேகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, சூரிய மின்சக்தி மற்றும் எல்.இ.டி. பல்புகள் பயன்பாடு என சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இந்த ரெயில்பெட்டி தயாரிப்பு ஆலையை வடிவமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டது.

இதன் முதல்கட்ட திட்டத்துக்காக 153 ஹெக்டேர் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு அவற்றில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன் மூலம் வருடத்துக்கு 250 ரெயில் பெட்டிகள் தயாரிக்க திட் டமிடப்பட்டு உள்ளதாகவும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்