மும்பையில் முக அடையாள கேமராக்கள் முதல் கட்டமாக 3 இடங்களில் பொருத்தப்படுகிறது

மும்பையில் பயங் கரவாதிகள், சமூக விரோதிகளை அடையா ளம் கண்டுபிடிக்க முக அடையாள கேமராக்கள் முதல் கட்டமாக 3 இடங்களில் பொருத்தப் படுகிறது.

Update: 2018-04-01 23:46 GMT
மும்பை,

நாட்டின் நிதி நகரமான மும்பை பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து வருகிறது. கொலை, கொள்ளை, கடத்தி பணம் பறித்தல், கற்பழிப்பு, போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றச்சம்பவங்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. குற்றங்களை குறைப்பதற்காக நகரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும் வகையில் மும்பையில் முக அடையாள கேமரா (பேஸ் ஐடெண்டிபிகேசன் கேமரா) எனப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

முதல் கட்டமாக இந்த கண்காணிப்பு கேமராக்கள் மெரின் டிரைவ், கிர்காவ் கடற்கரை, மந்திராலயா ஆகிய 3 இடங்களில் பொருத்தப்பட உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் எமர்ஜென்சி, மொபைல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை, கமாண்டு மையம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டு இருக்கும்.

பயங்கரவாத மற்றும் தொடர் குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் முக அடையாளம் மற்றும் அவர்களை பற்றிய விவரங்கள் இந்த கண்காணிப்பு கேமரா டேட்டாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

இந்த கண்காணிப்பு கேமராக்களின் கண்காணிப் பில் இருக்கும் பகுதியில் அந்த ஆசாமிகள் வரும்பட்சத்தில் உடனடியாக இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தும்.

இதன் மூலம் போலீசார் அவர்களை உடனடியாக பிடிக்க முடியும் என மும்பை போலீஸ் கமிஷனரக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்