குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் குடியாத்தம்-பள்ளிகொண்டா சாலை வாகன ஓட்டிகள் அவதி
குண்டும், குழியுமாக குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.
குடியாத்தம்,
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலை துறையின்கீழ் வருகிறது. குடியாத்தம் பாலிடெக்னிக் கூட்ரோடு அருகே இருந்து ரெயில்வே மேம்பாலம் செல்லும் வரை இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் சூழ்நிலையில் உள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலையில் தொடர்ச்சியாக ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் மோட்டார்சைக்கிளை ஓட்டிசெல்வது சாகசம் செய்வதுபோல் உள்ளது.
விபத்துகள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் மனைவி, குழந்தையுடன் சென்ற நபர் ஒருவர் சாலையின் பள்ளத்தை பார்த்து திடீரென மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதாமல் இருக்க உடனடியாக நிறுத்தியபோது, லாரியில் பின்னால் இருந்த இரும்பு பொருள் ஒன்று சரிந்து அதே லாரியில் பயணித்த தொழிலாளியின் காலில் விழுந்தது. இதில் அவரது கால் நசுங்கிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதேபோல் பல விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டும், குழியுமான சாலையில் பெயரளவில் ஆங்காங்கே கல்லையும், மண்ணையும் போட்டு நிரப்பி உள்ளனர். இதுவும் தற்போது பயனற்று மீண்டும் குண்டும், குழியுமாக மாறிவிட்டது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் எனவும், அதற்கு முன்பாக உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.