தண்டராம்பட்டு தாலுகாவில் வேளாண்மை திட்டப்பணிகளை ஆணையாளர் ஆய்வு
தண்டராம்பட்டு தாலுகாவில் வேளாண்மை திட்டப்பணிகளை ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தண்டராம்பட்டு,
மத்திய, மாநில அரசு சார்பில் தண்டராம்பட்டு தாலுகாவில் செயல்படுத்தப்பட்டு வரும் வேளாண்மை திட்டப்பணிகள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் குறித்து தமிழக வேளாண்மை செயலாளரும், வேளாண்மை உற்பத்தி ஆணையாளருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
தண்டராம்பட்டு அருகில் உள்ள ராதாபுரம் கிராமத்தில் இயங்கி வரும் பருப்பு உடைக்கும் ஆலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள், கூடுதலாக எந்திரங்கள் வாங்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதைத் தொடர்ந்து கொலமஞ்சனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வாகன திரவியம் தயாரிக்கும் ஆலையை பார்வையிட்ட போது, ஏஜெண்டு இல்லாத நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகளிடம் குறை கேட்டார்
பின்னர் மலமஞ்சனூரில் அமைக்கப்பட்டு உள்ள கசிவு நீர் குட்டை, தைலப் புல் தோட்டத்தை பார்வையிட்டார். இதனையடுத்து அவர், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, வேளாண்மை இணை இயக்குனர் செண்பகராஜ், துணை இயக்குனர் வேலாயுதம், தண்டராம்பட்டு உதவி இயக்குனர் பிரபு மற்றும் பலர் உடனிருந்தனர்.