மத்திய அரசை கண்டித்து விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆட்டோ டிரைவர்
சேலம் மணியனூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த 6 வாரம் காலக்கெடு முடிவடைந்தநிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்துவிட்டது என்றும், இதனால் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரக்கூடாது என்றும் சக ஆட்டோ டிரைவர்களிடம் பிரபு கூறி வந்துள்ளார்.
இந்தநிலையில், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை ஆட்டோவை நிறுத்தியிருந்த பிரபு திடீரென காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும், தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்க..! என்றும் கோஷமிட்டவாறு தனது கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.
இதை பார்த்தவுடன் சக ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பிரபு மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதையடுத்து அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்த இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜூ, கட்டிட தொழிலாளர் சங்க தலைவர் தாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெங்கநாதன், தமிழ்நாடு பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி மற்றும் பலர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினர். மேலும், பிரபுவின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும், அவர் தொடர்ந்து சில நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்றும் டாக்டர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆட்டோ டிரைவர் பிரபு கூறியதாவது:-
தமிழகத்திற்கு மோடி வரக்கூடாது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் அதை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. இந்த விவகாரத்தில் தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் ஒருமித்த கருத்தோடு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதை வரவேற்கிறேன். தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரக்கூடாது. அவருக்கு எதிராக தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். காவிரி பிரச்சினைக்காக எனது உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். ஜல்லிக்கட்டு உரிமையை நாம் எப்படி போராடி வெற்றி பெற்றோமோ? அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் பெரும் புரட்சி வெடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பிரபுக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.