கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். அதற்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நேற்று கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நவாப், மகளிர் அணி அமைப்பர் பரிதா நவாப், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூர் பஸ் நிலையம் அருகே, மேற்கு மாவட்ட செயலாளரும், தளி எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. முருகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஓசூர் நகர செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி, மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தில் தரையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 34 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், கைதான அனைவரும் வழியிலேயே விடுதலை செய்யப்பட்டனர்.
காவேரிப்பட்டணம்
இதேபோல் காவேரிப்பட்டணத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நகரச் செயலாளர்கள் பாபு, தம்பிதுரை, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் திராவிடமணி, ஒன்றியத்தலைவர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சசி, ஒன்றிய துணைச் செயலாளர் ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.