எழுமலை அருகே பெண் கழுத்தறுத்து கொலை: கணவன் கைது

எழுமலை அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-01 22:30 GMT
உசிலம்பட்டி,

எழுமலை அருகே உள்ளது கோடாங்கிநாயக்கன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் சின்னப்பாண்டி. இவருடைய மனைவி நல்லம்மாள்(வயது 50). கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இவர்களது மகன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் சின்னப்பாண்டி குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இவர்களது தோட்டம் ஊருக்கு வெளியே மலையடிவாரத்தில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு தோட்டத்து வீட்டில் இருந்த கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக திட்டிக்கொண்டதால் ஆத்திரமடைந்த சின்னப்பாண்டி அரிவாளால் நல்லம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

தொடர்ந்து சின்னப்பாண்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதையடுத்து நேற்று மதியம் தோட்டத்து பக்கம் சென்ற கிராமத்தினர் நல்லம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து ஊருக்குள் தெரிவித்தனர்.

இது குறித்து எழுமலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பெண்ணின் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையறிந்து சின்னப்பாண்டி சேடபட்டி காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்