காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட முயன்ற தி.மு.க.வினர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில், தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-01 20:13 GMT
திருப்பூர்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டம் நடத்துவதற்காக திருப்பூர் குமரன் சிலை முன்பு கட்சிக்கொடியுடன் நேற்று மதியம் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சென்னையில் மு.க.ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை தி.மு.க.வினர் கைவிட்டனர். இருப்பினும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பி திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

இதில் தொ.மு.ச. மாநில துணைச்செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, தங்கராஜ், ராமதாஸ், ராம கிருஷ்ணன், செந்தில்குமார் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்