சீகூர் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தை நடைமுறைபடுத்தக்கூடாது: 7 ஆதிவாசி கிராம மக்கள் எதிர்ப்பு
சீகூர் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தை நடைமுறைபடுத்த 7 ஆதிவாசி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் புலிகள் காப்பகத்தை விரிவுபடுத்தும் விதமாக முதுமலை புலிகள் காப்பகத்துடன் தற்போது சிங்காரா, சீகூர், தென்குமராடா ஆகிய 3 வனப்பகுதிகளும் புதிதாக இணைக்கபட்டு முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த 3 வனப்பகுதிகளும் புலிகள் காப்பகத்தின் முழு கட்டுபாட்டுக்குள் வந்து உள்ளதால் சிங்காரா, சீகூர் வனப்பகுதிகளில் முதற்கட்டமாக சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கி அதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சிங்காரா மற்றும் சீகூர் வனப்பகுதிகளை முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கக்கூடாது என மசினகுடி பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டு உள்ள சீகூர் வனப்பகுதிக்குள் வாகன சவாரி செய்ய வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதற்கு ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மந்தம், பூதநத்தம் உள்ளிட்ட 7 ஆதிவாசி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஆனைகட்டி கிராமத்தில் உள்ள மாசிகரியபண்ட அய்யன் கோவில் வளாகத்தில் கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதற்கு ஆனைகட்டி ஊர் தலைவர் பசுவன், துணை தலைவர் பொம்மராயன் ஆகியோர் தலைமை தாங்கினர். வனஉரிமை குழு தலைவர்கள் மணி, சொக்கநள்ளி பண்டன், சிவக்குமார், பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி, வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மந்தம், பூதநத்தம் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆனைகட்டி, சிறியூர், சொக்கநள்ளி வனபகுதிகளில் வாகன சவாரி திட்டத்தை வனத்துறை செயல்படுத்தினால் ஆதிவாசி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கபட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் சீகூர் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தை நடைமுறை படுத்தக்கூடாது என முடிவு செய்யபட்டது.
பின்னர் சூழல் சுற்றுலா என்ற பெயரில் வாகன சவாரி மேற்கொள்ளும் திட்டத்தை வனத்துறை கொண்டு வர கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டது. அவ்வாறு சூழல் சுற்றுலா திட்டத்தை கொண்டு வந்தால் தங்களுடைய கலாசாரம் பாதிக்கபடுவதுடன், உரிமைகள் பரிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனவே முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சீகூர் வனப்பகுதியினுள் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு மனு அளிக்க உள்ளனர்.