மு.க.ஸ்டாலின் கைதானதை கண்டித்து தி.மு.க.வினர் சாலை மறியல்: 200 பேர் கைது
சென்னையில் மு.க.ஸ்டாலின் கைதானதை கண்டித்து கோவையில் சாலைமறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன்படி மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் கோவையில் தி.மு.க.வினர் நேற்றுமதியம் கோவை அவினாசி ரோடு பீளமேடு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.இதில் தி.மு.க. நிர்வாகிகள் மகேஷ்குமார், பாலசுப்பிரமணியம், மாடசாமி, சசிகுமார், செல்வராஜ், நடேசன் உள்பட பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். மறியல் போராட்டம் காரணமாக கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை டவுன்ஹால் பகுதியில் கோவை மாநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் சாலைமறியல் நடந்தது. இதில், துணை அமைப்பாளர்கள் திருமலைராஜா, கேபிள் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை என்.எஸ்.ஆர். சாலையில் ரவி தலைமையிலும், உக்கடத்தில் முருகேசன் தலைமையிலும் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இதன்மூலம் கோவை மாநகரில் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க.வினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.