உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினர் மோதல்; 10 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே இருதரப்பினர் மோதலில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-04-01 21:45 GMT

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூரை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் கண்ணன் (வயது 18). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பலராமன் மகன் திருமூர்த்தி (23) என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் திட்டி தாக்கிக் கொண்டனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட திருநாவலூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த கண்ணன், ஜெயகிருஷ்ணன், அருண், காளிதாஸ், பலராமன், லோகநாதன், திருமூர்த்தி, திருப்பதி, மகேந்திரன், பிரதீப்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்