கோவிலில் அம்மன் சிலை-நகைகள் திருட்டு
திருவொற்றியூரில் கோவிலில் அம்மன் கற்சிலை மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ஈசானிமூர்த்தி கோவில் தெருவில் அஷ்டபுஜங்க ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. அதன் முன்புறம் மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு சிறிய அளவிலான தனி சன்னதி அமைந்துள்ளது. அதன் உள்ளே சுமார் 2 அடி உயரம் உள்ள அங்காளம்மன் கற்சிலை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சேகர், கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த அவர், கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள், கோவில் பூட்டுகளை உடைத்து அங்காளம்மன் கற்சிலையை பெயர்த்து எடுத்து சென்று உள்ளனர். மேலும் ஆதிபராசக்தி அம்மன் சிலையில் இருந்த சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளையும் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இதுபற்றி பூசாரி சேகர் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் அம்மன் கற்சிலை மற்றும் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.