நியூட்ரினோ மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில் ஏறி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாரம்,
தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் மத்திய அரசின் அணுசக்தி துறை சார்பில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க முதல் கட்ட பணிகள் தீவிரமாக நடந்தது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு ஐகோர்ட்டு மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. இதனை அடுத்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் கட்டுமானப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியதை, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது.
தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மீண்டும் பணிகள் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 12 மணிக்கு நாம் தமிழர் கட்சி தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள்களில் தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் உள்ள அம்பரப்பர் மலையடிவார பகுதிக்கு வந்தனர். அங்கு மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு, மலையில் ஏற முயன்றனர். ஆனால் மலையை சுற்றி கம்பி வேலி அமைத்து இருந்ததால் செல்ல முடியவில்லை.
இதையடுத்து மாற்றுப்பாதை வழியாக அந்த மலையில் ஏறினர். அவர்கள் கட்சிக்கொடியை கையில் பிடித்து இருந்தனர். பின்பு மலையில் ஒரு இடத்தில் கூட்டமாக நின்று கோஷமிட்டனர். அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவேண்டும். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைப்பதை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
சுமார் 2 மணி நேரத்துக்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கினர். பின்பு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் பொட்டிப்புரம் அருகில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 27 பேரை போடி தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.