கல்லல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலி

கல்லல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கொத்தனார் பலியானார்.;

Update: 2018-04-01 18:52 GMT

காரைக்குடி,

காரைக்குடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கண்ணன (வயது 35). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். கண்ணன் நேற்று கல்லல் அருகே அரண்மனைசிறுவயலில் உள்ள ஒரு வீட்டில் பராமரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் மேல் பகுதி சுவர் திடீரென்று இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்துபோன கண்ணனுக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

மேலும் செய்திகள்