திருவட்டார் அருகே காண்டிராக்டர் வீட்டில் 61 பவுன் நகை–ரூ. 65 ஆயிரம் கொள்ளை
திருவட்டார் அருகே காண்டிராக்டர் குடும்பத்துடன் ஈஸ்டர் பிரார்த்தனைக்கு சென்ற போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 61 பவுன் நகை மற்றும் ரூ.66 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே உள்ள செறுகோல், சிவனான்தட்டுவிளையை சேர்ந்தவர் சோபிதராஜ், கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி அமலோற்பவம். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கும், மகனுக்கும் திருமணம் ஆகி விட்டது. சிவகங்கையில் மகனும், மருமகளும் வங்கிகளில் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணி அளவில் சோபிதராஜ் வீட்டை பூட்டி விட்டு, மனைவி மற்றும் மகளுடன் வீடு அருகே உள்ள ஆலயத்தில் நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனையில் பங்கு பெறுவதற்காக சென்றார். அங்கு நள்ளிரவு பிரார்த்தனை முடிந்த பிறகு 1.45 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார்கள்.
வீட்டின் கதவை சோபிதராஜ் திறக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது, அங்கு பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு கீழ்தளத்தில் உள்ள அறையின் கதவு திறந்த நிலையில், அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில், ஒரு டிபன் பாக்சில் வைத்து இருந்த 6 பவுன் நகையை காணவில்லை. அவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதே போல் மற்றொரு அறையில் இருந்த பீரோவை உடைத்து ரூ.65 ஆயிரம் மற்றும் அலமாரி பர்சில் இருந்த ரூ.1,500–ம் என மொத்தம் ரூ.66 ஆயிரத்து 500–யும் கொள்ளையடிக்கப்ப ட்டது.
இதே போல் முதல் மாடியில் இருந்த பீரோவையும் உடைத்து அதில் வைத்து இருந்த 55 பவுன் நகையையும் கொள்ளையடித்து செல்லப்பட்டது.
இதுபற்றி சோபிதராஜ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டின் பின்பக்க வாசலில் உள்ள சாலை வழியாக ஓடி குட்டைகுழி அருகே உள்ள முட்டைகுளம் பகுதியில் நின்று விட்டது.
எனவே சோபிதராஜ் குடும்பத்துடன் ஆலயத்துக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து 61 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் தாங்கள் தப்பிக்க வசதியாக முன்புற கதவையும் திறக்க முடியாத அளவு உள்புறமாக பூட்டிவிட்டு கைவரிசையை காட்டியுள்ளனர்.
இதுதவிர சோபிதராஜ் வீடு அருகே உள்ள தெருவிளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதுபற்றி அவர்கள் பலமுறை புகார் கொடுத்தும் சரி செய்யப்படவில்லை எனவும் பொது மக்கள் கூறுகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.