ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Update: 2018-04-01 22:00 GMT

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் வருகிற 15–ந்தேதி முதல் ஜூன் மாதம் வரை மீன்பிடி தடைகாலத்தையொட்டியும், மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் மீன்பிடிக்க செல்வது தொடர்பாக மீனவர்கள் இடையே குழப்பமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று இன்றுமுதல் (திங்கட்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை மீனவ சங்க தலைவர் தேவதாஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்