கின்னஸ் கலைப்பொருட்கள்
குப்பையில் தூக்கி வீசப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருட்களாக மாற்றி அழகுபடுத்தி பார்க்கும் ஆர்வம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.
குப்பையில் தூக்கி வீசப்படும் பொருட்களை மறுசுழற்சி செய்து கலை பொருட்களாக மாற்றி அழகுபடுத்தி பார்க்கும் ஆர்வம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது. விஜிதா ரதீஷ் என்ற பெண்மணி குப்பைத்தொட்டியில் குவிக்கப்படும் பொருட்களை சேகரித்து பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்கிறார். அது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துவிட்டது.
திருமண அழைப்பிதழ்கள், கிழிந்த நோட்டு புத்தகங்கள், பயன்படுத்தப்பட்டு கசக்கி வீசப்படும் பேப்பர்கள், துண்டு பிரசுரங்கள், பழைய புத்தகங்கள் உள்ளிட்ட வீணான பொருட்கள்தான் இவருடைய பொம்மை தயாரிப்புக்கு மூலதனம். அவைகளை தன்னுடைய கைவண்ணத்தில் பொம்மையாக உருமாற்றி அதற்கு அழகிய உருவமைப்பை ஏற்படுத்தி விடுகிறார். ஒவ்வொரு பொம்மையும் வடிவமைப்பு பாணியிலும், உருவ அழகிலும் மாறு பட்டு தனித்துவமாக தெரிகின்றன. பொம்மைகளை அழகுபடுத்துவதற்காக செயற்கை ரசாயன பூச்சு வண்ணங்களையும் இவர் தவிர்த்து வருகிறார்.
‘‘நான் ஆரம்பத்தில் பொழுதை போக்குவதற்காகவே பேப்பர் பொம்மைகளை உருவாக்க தொடங்கினேன். நாளடைவில் அதன் மீது ஈடுபாடு அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் தினமும் ஒன்று அல்லது இரண்டு பொம்மைகள்தான் தயார் செய்வேன். இப்போது தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 பொம்மைகளை உருவாக்கிவிடுகிறேன்’’ என் கிறார்.
விஜிதா மூன்று மாதங்களில் 1350 பொம்மைகளை உருவாக்கி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து விட்டார். இத்தனை பொம்மைகளை உருவாக்குவதற்கு தேர்தல் காலம் சரியான தருணமாக அமைந்தது என்கிறார். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்கள் கொடுத்த துண்டு பிரசுரங்கள் வீதிகளில் குப்பை கூளங்களாக குவிய தொடங்கியிருக்கிறது. அவைகளை சேகரித்து பொம்மைகள் உருவாக்கியுள்ளார். வீணான காகித அட்டைகளை பயன் படுத்தி ஏற்கனவே காதுகளில் அணியும் ஜிமிக்கி கம்மலை இரண்டரை அடி நீளத்தில் உருவாக்கியுள்ளார். அதுபோல் காட்டன் பேப்பர்களை பயன் படுத்தி 50 அடி நீளத்தில் நெக்லஸையும் உருவாக்கி இருக்கிறார். அவை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த விஜிதா பேஷன் டிசைனிங் படித்தவர்.
‘‘வீணான பொருட்களை கலைப்பொருட்களை உருவாக்கி காட்சிப்படுத்தினால் அதனை பார்க்கும் மற்றவர்களுக்கும் அதன் மீது ஈடுபாடு ஏற்படும். வீணான பொருட்களை மறுசுழற்சி செய்து கலைப்பொருட்களாக மாற்றி வீட்டை அழகுப்படுத்த தொடங்கிவிடுவார்கள். ஏதாவதொரு கலைகள் மீது ஆர்வம் காண்பிக்க தொடங்கினால் கவலைகள் நீங்கும். மனம் இலகுவாகும். மன அழுத்தத்தால் ஏற்படும் நோய்களும் நீங்கும். ஆர்வமிக்க சுயதொழிலாகவும் மாற்றி வருமானமும் ஈட்டலாம். வெளிநாடுகளில் இது ‘ஆர்ட் தெரபி’ என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது’’ என்கிறார்.