திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.;
திருப்பூர்,
நீர்மோர் பந்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்ப்பூசணி பழம், வெள்ளரி, ஆரஞ்சு பழம் போன்றவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜான், ராதாகிருஷ்ணன், கருணாகரன், கணேஷ், நீதிராஜன், ஷாஜகான் உள்பட பலர் கலந்துகொண்டனர்.