‘சத்ரபதி சிவாஜி ஒவ்வொரு வீட்டிலும் பிறக்க வேண்டும்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு
சத்ரபதி சிவாஜி ஒவ்வொரு வீட்டிலும் பிறக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
ராய்காட்,

நினைவு தினவிழா
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவு தின விழா ராய்காட் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ராய்காட் துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனது வீடு உள்பட ஒவ்வொரு வீட்டிலும் சத்ரபதி சிவாஜி பிறக்க வேண்டும் என கூறினார். இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:-
அநீதி மற்றும் சுரண்டலுக்கு எதிராக போராடும் அனைவருக்கும் வீர சிவாஜி ஒரு நல்ல முன்னுதாரணம். மதச்சார்பற்ற ஆட்சி வழங்கிய வீர சிவாஜி இன்றைக்கும் எனக்கு ஒரு சிறந்த வழிகாட்டி. ஒரு காலத்தில் நேர்மையான குடிமக்கள் நிரம்பி இருந்த இந்த மண்ணில் இன்று ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்?.
இவ்வாறு அவர் பேசினார்.
அழைப்பிதழால் பரபரப்பு
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அழைப்பிதழில் தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் தத்காரேயின் மகள் அதீதி தத்காரேயின் பெயர் இடம்பெற்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதீதி தத்காரே ராய்காட் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்பதால் மரியாதை நிமித்தமாக அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதாக விழாக்குழுவினர் விளக்கம் அளித்தனர். விழாவில் அதீதி தத்காரே பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.