பட்டு சேலை- செல்போன் திருடிய 3 பெண்கள் கைது
பட்டு சேலை மற்றும் செல்போன் திருடியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு,
ஈரோடு திண்டல் சாமுண்டிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட். இவரது மனைவி வைலட் (வயது 75). கணவர் இறந்துவிட்டதால் வைலட் தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் அந்த பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த பட்டுசேலை மற்றும் செல்போன் மாயமானது. இதற்கிடையே விஜயாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வைலட் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘விஜயா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய தோழிகளான ராசாத்தி, மணியாள் ஆகியோருடன் சேர்ந்து வைலட் வீட்டில் திருடியதை’ ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் விஜயா, ராசாத்தி, மணியாள் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பட்டு சேலை மற்றும் செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.