மண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவா? நடிகர் அம்பரீஷ் பதில்
வருகிற தேர்தலில் மண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவா? என்பது குறித்து நடிகர் அம்பரீஷ் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு,

நடிகர் அம்பரீஷ்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அம்பரீஷ். இவர், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் முதல்-மந்திரி சித்தராமையாவின் மந்திரி சபையில் வீட்டு வசதித்துறை மந்திரியாகவும் அம்பரீஷ் இருந்தார். பின்னர் அவரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் நடிகர் அம்பரீஷ் அறிவித்தார். அதே நேரத்தில் மந்திரி பதவி பறிக்கப்பட்டதாலும், உடல் நலக்குறைவு காரணமாகவும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் அவர் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்காக மண்டியா மாவட்டத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கூட அம்பரீஷ் செல்லவில்லை. இதனால் அவர் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மண்டியாவில் போட்டியிடாமல் இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று நடிகர் அம்பரீசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிடுவது குறித்து...
அரசியலிலும், சினிமாவிலும் நான் வெற்றி, தோல்விகளை சந்தித்துள்ளேன். எனது உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தேன். நான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்கு பின்பு பூரண குணமடைந்தேன். நான் மறுஜென்மம் எடுத்து வந்திருப்பதாகவே உணருகிறேன். மண்டியா மக்கள் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். சட்டசபை தேர்தலில் போட்டியிடுமாறு தொடர்ந்து என்னை வலியுறுத்தி வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலில் மண்டியா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏப்ரல் 2-ந் தேதி (அதாவது நாளை) எனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன். என்னை பற்றி வரும் தவறான தகவல்களை கண்டு கொள்வதில்லை. நாய்கள் குரைக்க தான் செய்யும். அதனை பெரிதாக எடுத்து கொள்ளக்கூடாது.
இவ்வாறு நடிகர் அம்பரீஷ் கூறினார்.