இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும், 31-ந்தேதி காலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நேற்று ராமேசுவரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கை சிறையில் உள்ள 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், 184 படகுகளை மீட்க வேண்டும். குந்துகால் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இந்திய-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.
இதில் மீனவர் சங்க தலைவர்கள் என்.ஜே.போஸ், சேசு, எமரிட், தட்சிணாமூர்த்தி, சகாயம், மகத்துவம் உள்பட ஏராளமான மீனவர்களும், படகுகளை இழந்து தவிக்கும் மீனவ குடும்பத்தினரும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. சார்பில் நாசர்கான், சண்முகம்,தே.மு.தி.க சார்பில் நகர் செயலாளர் முத்துக்காமாட்சி மாவட்ட பொருளாளர் திலீப்காந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் செந்தில், காங்கிரஸ் சார்பில் பாரிராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஜெரோன்குமார், கண் இளங்கோஉள்பட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதனையொட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.