காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து புதுவையில் 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம், சமூக அமைப்புகள் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து புதுவையில் வருகிற 11-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.
புதுச்சேரி,
புதுச்சேரி நீடராஜப்பையர் வீதியில் உள்ள செகா ஆர்ட் கேலரியில் நேற்று காலை பல்வேறு சமூக அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு இயக்க செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு அய்யப்பன், தமிழர் களம் தலைவர் அழகர், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தெய்வீகன், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் இயக்க தலைவர் ரகுபதி உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல் தமிழகம் மற்றும் புதுவைக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தீர்ப்பை அமல்படுத்துவதற்கு சரியான முறையில் அழுத்தம் கொடுக்காத தமிழக, புதுச்சேரி மாநில அரசுகளை கண்டித்தும் வருகிற 11-ந் தேதி (புதன்கிழமை) புதுவை, காரைக்காலில் முழுஅடைப்பு போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.
இந்த போராட்டத்திற்கு புதுவை, காரைக்கால் பகுதிகளில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தாமாக முன்வந்து ஆதரவு தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.