முதல்-அமைச்சர் அரசியல் நிலையோடு செயல்பட்டால் அ.தி.மு.க. தனது நிலையை மாற்றிக்கொள்ளும் - அன்பழகன் எம்.எல்.ஏ. அறிவிப்பு
முதல்-அமைச்சர் அரசியல் நிலையோடு செயல்பட்டால் அ.தி.மு.க. தனது நிலையை மாற்றிக்கொள்ளும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஒட்டுமொத்த தமிழர்களுக்கு துரோகம் செய்துள்ளது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு விதமான அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுத்தது.
பாராளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து 17 நாட்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கம் செய்துள்ளனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் உணர்வுகளைக்கூட புரிந்து கொள்ளாத புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்காமல் கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரசுக்கு சாதகமான ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று கூறிய முதல்-அமைச்சர் நாராயணசாமி தமிழக அரசோடு இணைந்து செயல்படாதது ஏன்?
கவர்னருக்கு மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லை. மக்களை பற்றியும், மாநில உரிமைகள் பற்றியும் கவலைப்படாமல் முதல்- அமைச்சர் அரசியல் நிலையோடு செயல்பட்டால், அ.தி.மு.க.வும் தனது நிலையை மாற்றிக்கொள்ளும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மீது இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை ரங்கசாமி பேரம் பேசுவதாகக்கூறி தன் கட்சி எம்.எல்.ஏ.க்களை அவர் களங்கப்படுத்தி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்தும் அ.தி. மு.க. தலைமைக் கழக உத்தரவின்படி மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் சுதேசி மில் அருகில் வருகிற 3-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.