கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியை கண்டித்து தி.மு.க., அ.ம.மு.க.வினர் போராட்டம்
கொடைக்கானல் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தேர்தலில், அலுவலர் குறிப்பிட்ட நேரத்தில் வராத காரணத்தால் தி.மு.க மற்றும் அ.ம.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்குவதாக இருந்தது. இந்த சங்க கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகத்தினர் கடந்த மாதம் பூட்டி சீல் வைத்தனர். அதன்பிறகு கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்படவில்லை.
இதனை அகற்றக்கோரி தொடர்ந்த வழக்கில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த கட்டிடத்தினை திறக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருப்பினும் அந்த கட்டிடம் திறக்கப்படவில்லை. கூட்டுறவு சங்க தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற இருந்தநிலையில் காலை 11 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி வராததுடன் அலுவலகமும் திறக்கப்படாமல் இருந்தது.
இதனை கண்டித்து தி.மு.க.நகர செயலாளர் முகமது இபுராகிம் தலைமையில் அக்கட்சியினரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் நகர செயலாளர் கோவிந்தன் தலைமையில் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் அதிகாரி பிரேம்குமாரிடம் இரு கட்சியினரும் அலுவலகத்தினை திறந்து வேட்பு மனுக்களை வாங்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் நகராட்சி அலுவலர்கள் வந்து சீலை அகற்றினால் தான் அலுவலகத்தை திறக்க முடியும் என கூறினார்‘ அதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அலுவலக வாசலின் முன்பாக வேட்பு மனுக்களை பெற முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து முதலாவதாக அ.தி.மு.க.வினர் மனுதாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து மற்ற கட்சியினர் மனுதாக்கல் செய்தனர்.
இதனிடையே அலுவலகம் முன்பாக கூடிய அ.தி.மு.க.வினரும், அ.ம.மு.க.வினரும் எழுப்பிய கோஷங்களால் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.