காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் - நாராயணசாமி உறுதி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நிச்சயம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி புதுவை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசு சார்பில் கடிதம் கொடுத்தோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசு காலம்தாழ்த்தியதால் 2-வது முறையாக 9.3.2018 அன்று மீண்டும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்து எங்களுடைய நிலைப்பாட்டை உறுதி செய்தோம். இந்த கடிதத்திற்கு பிரதமரிடம் இருந்து பதில் வரவில்லை.
இதற்கிடையே கடந்த 26-ந் தேதி புதுச்சேரி சட்டசபை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோம். மத்திய அரசு அதை மீறும் பட்சத்தில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். அதேபோல் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசித்து தேவைப்பட்டால் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யவும் அரசு தயாராக உள்ளது என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றினோம்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு வழங்கிய காலக்கெடு கடந்த 29-ந் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதற்கிடையே ‘ஸ்கீம்’ குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து இன்று (அதாவது நேற்று) நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்து உள்ளது. புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம். எங்களின் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசு கொடுத்த வாக்குறுதி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், கூட்டணிக்கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து நாங்கள் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கவர்னரிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மீது விரைவில் வழக்கு தொடருவோம். கூட்டணி கட்சிகள், ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளை அழைத்து பேசி மேற்கொண்டு நடவடிக்கை என்ன என்பதை எங்கள் அரசு முடிவு செய்யும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டது அல்ல என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வரும் நிலையில் நாங்கள் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.
காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்தி தமிழகம், புதுச்சேரி அரசை வஞ்சிக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள எங்களின் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகளுடன் கலந்து பேசி போராட்டம் தொடர்பாக அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.