திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதையடுத்து மழை பெய்யவில்லை. தினமும் வெயில் சுட்டெரித்த வண்ணம் தான் இருந்தது.
பொதுவாக ஏப்ரல் மாத இறுதியில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மே மாதம் கடுமையாக வெயில் அடிக்கும். ஆனால் கடந்த மாதம் முதலே மாவட்டம் முழுவதும், கோடை காலத்தை போல வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்றும் காலை முதலே திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. பின்னர் 6 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ½ மணி நேரம் வரை நீடித்தது. மிதமான மழை பெய்ததால் சாலையில் மழை நீர் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் நகர் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இதேபோல, கொடைக்கானல் பகுதியில் தற்போது குளு, குளு சீசன் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவ்வப்போது மழை பெய்தும் வருகிறது. இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் நீடித்தது.
இதுமட்டுமின்றி கொடைக் கானல் செண்பகனூர் உள்பட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அந்த பகுதி மக்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் ஐஸ் கட்டிகளை கைகளில் எடுத்துப்பார்த்து மகிழ்ந்தனர். பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட கொடைக்கானல் பகுதியில் உள்ள அருவிகளில் பரவலாக தண்ணீர் விழுந்தது.
கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் நட்சத்திர ஏரி, நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக் கானலுக்கு வந்திருந்தனர். அவர்கள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.