காரங்காடு கடல் பகுதியில் அரிய வகை தாவரங்கள், உயிரினங்கள்
தொண்டி அருகே காரங்காடு கடல் பகுதியில் அரியவகை கடல் தாவரங்கள், உயிரினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
தொண்டி,
திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் மாங்குரோவ் காடுகள் இயற்கை எழில் நிறைந்து காணப்படு கிறது. இவை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாழைகள், கடல் கோரைகள், கடல்தாமரை, நட்சத்திர மீன்வகைகள், அரிய வகை நண்டுகள், அட்டைகள் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் இங்குள்ள மாங்குரோவ் காடுகள் பறவையினங்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்ததாக இருப்பதால் இங்கு கொக்கு, நீர் காகம், நாரை, அரிவாள் மூக்கன் நாரை, உள்ளான், நத்தை கொத்தி நாரை, சிட்டு, வண்ண வண்ண குருவிகள் போன்ற பலவகையான பறவைகளும் சரணாலயமாக கருதி வருகின்றன.
இவை தவிர சீனா, சைபிரீயா போன்ற குளிர்பிரதேச நாடுகளில் இருந்தும் அரியவகை பறவைகள் காரங்காடு கடற்கரைக்கு ஆண்டுதோறும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன. இதேபோல் இங்குள்ள கடல் பகுதியில் கடல் பசுக்கள் அதிகஅளவில் காணப்படுவதால் இங்குள்ள தீவு பகுதியை வனத்துறை கடல் பசு தீவாக அறிவித்துள்ளது. மேலும் காரங்காடு பகுதியை சூழல் சுற்றுலா மையமாகவும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
காரங்காடு கிராம கடல் பகுதியில் கடல் கரும்பு என அழைக்கப்படும் கடல் தாழைகள், கடல்புற்கள், கடல் கோரைகள், கடல்பாசிகள் போன்ற அரிய வகை தாவரங்களை அதிக அளவில் காணமுடிகிறது. இவைகளை ஆவுலியா எனப்படும் கடல் பசுக்கள் விரும்பி சாப்பிடும். இவை ஆழம் குறைவான பகுதிகளில் வளரக்கூடியது. கடலில் கலக்கும் அனைத்து கழிவுகளையும் வடிகட்டும் வடிகட்டிபோல் இந்த தாவரங்கள் செயல்படுகின்றன. இதனால் பவளப்பாறைகள், மீன் வகைகள், மாசு இல்லாமல் இப் பகுதியில் உள்ள கடலில் வாழ வழி வகுக்கின்றன.
இதேபோல முதுகெலும்பு இல்லாத வகையை சேர்ந்த கடல் அட்டிகளும் அதிக அளவில் உள்ளன. இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சிறிய வகை மீன்களை உட்கொள்ள கூடியதாகும். இதில் ஒரு வகையான கடல் அட்டிகள் விஷத்தன்மை கொண்டவை. மேலும் கடலில் உள்ள சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நட்சத்திர மீன்களும் இங்கு காணப்படுகின்றன. இவை ஆழம் குறைவாக உள்ள பகுதிகளில் வளரக்கூடியது. தண்ணீரை உறிஞ்சி கிருமிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன. இதேபோல் அறிய வகை உயிரினமான கடல் தாமரைகளும் உள்ளன. இவ்வகை கடல் தாமரைகளில் அரிய வகை இறால், கலர் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
மேலும் சொறி மீன் எனப்படும் ஒரு வகையான மீன்களும் இங்கு காணப்படுகின்றன. வெப்பம் அதிகம் உள்ள இடங்களில் உயிர் வாழக் கூடிய இவ்வகையான சொறி மீன்களும் இங்கு அதிகம் காணப்படுகின்றன. இவை அதிகம் இருந்தால் கடலில் ஒருவகையான இயற்கை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இங்குள்ள கடல் பகுதியில் கடல் வாழ் உயிரினங்களும், கடற் புற்களும் அதிகளவில் காணப்படுவதற்கு மிக முக்கிய காரணமாக விளங்குவது அலையாத்தி காடுகள் என அழைக்கப்படும் மாங்குரோவ் காடுகள்தான் என்றால் மிகையாகாது.