கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் திடீர் போராட்டம்

தும்பலஅள்ளியில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் திடீர் போராட்டம்.;

Update: 2018-03-31 22:15 GMT
காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தும்பலஅள்ளியில் தொடக்க வேளாண்மை சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் வேட்பு மனுதாக்கல் நேற்று நடைபெற்றது. இங்கு வேட்புமனு பெறும் அதிகாரியாக பணிபுரிந்தவர் மதியம் உணவு சாப்பிட சென்றதாகவும், மீண்டும் வர காலதாமதம் ஆனதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு வேட்புமனுதாக்கல் செய்ய வந்தவர்களில் சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க வளாகத்தில் முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டம் நடத்தி அவர்கள் அலுவலக ஷட்டரை இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் காரணமாக வேட்பு மனுதாக்கல் செய்யும் பணி 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்