கார் கவிழ்ந்து பெண் பலி

நசரத்பேட்டை அருகே கார் கவிழ்ந்து பெண் பலியானார்.

Update: 2018-03-31 22:30 GMT
பூந்தமல்லி, 

திருப்பூரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 65). ஆடிட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பர்வதவர்தினி (61). நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து ஆவடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் மணிகண்டன் (25) ஓட்டினார். கணவன், மனைவி இருவரும் பின்னால் அமர்ந்து இருந்தனர்.

நேற்று அதிகாலையில் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, நசரத்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் இடையே உள்ள காலி இடத்தில் கவிழ்ந்தது.

சாவு

இதில் காரில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பர்வதவர்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். பாண்டியராஜன், மணிகண்டன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்