அதிகாரிகள் இல்லாததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்
கும்பகோணத்தில் கூட்டுறவு சங்கத்தில் அதிகாரிகள் இல்லாததை கண்டித்து பெண்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கத்துக்கு தேர்தல் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த தேர்தல் 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் கும்பகோணம் பழைய அரண்மனைகாரத்தெருவில் உள்ள மகளிர் தையற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தேர்தல் வருகிற 7-ந் தேதி (சனிக் கிழமை) நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், வேட்பு மனுக்களை வாங்க சங்க உறுப்பினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டுறவு சங்கத்துக்கு வந்தனர். ஆனால் சங்கத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. இதை கண்டித்து பெண்கள் கூட்டுறவு சங்கத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்க உறுப்பினர் ராஜேஸ்வரி கூறுகையில், கடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல் இந்த ஆண்டும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களையே சங்க நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பதற்காக, அதிகாரிகளை சங்க அலுவலகத்துக்கு வரவிடாமல் வேறு இடத்திற்கு வரவழைத்து, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களிடம் மட்டும் வேட்பு மனுவை வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.