மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி 65 பேர் கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.;
நாகப்பட்டினம்,
நாகை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று நாகை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், குலோத்துங்கன் மற்றும் போலீசார் ரெயில் மறியல் செய்ய முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாம் தமிழர் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு மத்திய-மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் கட்டப்பிள்ளை அப்பு, சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் ராசேந்திரன் (வேதாரண்யம்), பழனிவேல் (கீழ்வேளூர்), ரமேஷ்குமார் (நாகை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
65 பேர் கைது
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக உரிமைகளை காக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்தும், காவிரி படுகையில் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட திட்டங்களை தடுத்திடக்கோரியும், தமிழர்களின் உயிரை குடிக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 65 பேரை கைது செய்து வேனில் ஏற்றி புத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.