நர்சுகள் சேவை மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்
நோயாளிகளிடம், நர்சுகள் சேவைமனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார் பேசினார்.
வேலூர்,
வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி நர்சிங் கல்லூரி ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நாராயணி மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சக்தி அம்மாவின் தாயார் ஜோதியம்மா குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றினர். பின்னர் கல்லூரியின் துணை முதல்வர் காந்திமதி வரவேற்று பேசினார். நாராயணி கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தொடக்கவுரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் சுஜாதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். பேராசிரியை லிடியா, கல்லூரியின் கடந்த ஆண்டு நடந்த சாதனைகள் குறித்து விளக்கினார். விழாவில் ஆண்டுமலர் வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் 4 முதுகலை மாணவிகள், 51 பட்டதாரி மாணவிகள், 38 டிப்ளமோ மாணவிகள் என மொத்தம் 93 மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகள் மற்றும் நர்சிங் கல்லூரியின் சிறந்த ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. விழாவில் நந்தகுமார் பேசியதாவது.
வேலூருக்கு அடையாளமாக திகழ்வது நாராயணி தங்கக்கோவில் தான். நாராயணி நர்சிங் கல்லூரி மாணவிகள் நர்சிங் துறையில் சிறந்தவர்களாக திகழவேண்டும். நோயாளிகளிடம் சேவை மனப்பான்மையுடனும், முகம் சுளிக்காமலும் மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்றார்.
இதனையடுத்து துணை கண்காணிப்பாளர் விஜயா மாணவிகளை வாழ்த்தி பேசினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கலையரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை சுதா நன்றி கூறினார்.