காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் - ஜி.கே.வாசன் பேட்டி
‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்’ என்று ஜி.கே.வாசன் கூறினார்.
கோவை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்றுக்காலை ரெயில் மூலம் கோவை வந்தார். இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய கட்சிகளில் இருந்து விலகியவர்கள் ஜி.கே.வாசன் முன்னிலையில் த.மா.கா.வில் இணையும் நிகழ்ச்சி கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பு உள்ள அலுவலகத்தில் நடந்தது. புதிதாக கட்சியில் சேர்ந்த சி.ஆர்.ரவிச்சந்திரன், குல்பி தங்கராஜ், செல்வபுரம் நசீர் உசேன் மற்றும் பலரை ஜி.கே.வாசன் சால்வை அணிவித்து வரவேற்றார். முன்னதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரிநீர் பிரச்சினை என்பது நமது பயிர் பிரச்சினை மட்டுமல்ல. உயிர் பிரச்சினையும் கூட. காவிரி பிரச்சினையை பொறுத்தவரை மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு காத்திருந்த தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும், மத்திய அரசு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது. கர்நாடக தேர்தல் காரணமாக மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்த நினைக்கிறது.
இன்றைக்கு வாரியத்தை அமைக்காமல் மத்திய பா.ஜனதா அரசும், இதை அமைக்க தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் கர்நாடக காங்கிரஸ் அரசும், தமிழக மக்களையும், விவசாயிகளையும் வஞ்சித்து விட்டன. எனவே 2 தேசிய கட்சிகள் மீதும் தமிழக மக்கள், விவசாயிகள் நம்பிக்கை இழந்து விட்டனர். காவிரி பிரச்சினையை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்த கருத்தோடு செயல்பட்டால் தான் தீர்வு காண முடியும். தேசிய கட்சிகள் இதை தமிழக பிரச்சினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தேசிய பிரச்சினை.
காவிரி பிரச்சினை தொடர்பாக திருச்சியில் நாளை(இன்று) காலை 11 மணிக்கு தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மாவட்ட தலைவர்களின் அவசர கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மேலும் அழுத்தம் கொடுக்கும் வகை யில் விவசாயிகளின் நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்க உள்ளோம். 1-ந் தேதி (நாளை)விவசாயிகளை சந்தித்து பேச உள்ளேன். 2-ந் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
காவிரி பிரச்சினையில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் நிலை என்ன என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதை விவசாயிகளும், மக்களும் தெளிவாக புரிந்து கொண்டு அந்த கட்சிகளையும் அவற்றை சார்ந்துள்ள கட்சிகளையும் வருகிற தேர்தலில் மக்கள் எடை போடுவார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கடைசி நாள் தான் போட வேண்டும். ஆனால் அதையெல்லாம் தாண்டி தமிழக அரசின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது.
எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய தயார் என்று கூறியிருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் என்று அனைத்து கட்சிகளையும் தமிழக அரசு டெல்லிக்கு அழைத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் தீர்வு ஏற்படும்.
தி.மு.க. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் நானும் மத்திய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தேன். அப்போது காவிரி பிரச்சினையில் ஒத்த கருத்து ஏற்படவில்லை. அதை விவசாயிகள் பிரச்சினையாக பார்க்காமல் அரசியல் சாயத்துடன் பார்க்கப்பட்டது. அதனால் அப்போது தீர்வு ஏற்படவில்லை. ஆனால் தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும் கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் கர்நாடக அரசும், மத்திய அரசும் செயல்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.