தென்னக ரெயில்வே பாதுகாப்புபடை ஐ.ஜி. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் ஆய்வு
தென்னக ரெயில்வே பாதுகாப்புபடை ஐ.ஜி.பார்கி நேற்று ராமேசுவரத்தில் ரெயில் நிலையம், காவல்நிலையங்களை ஆய்வு செய்தார்.;
ராமேசுவரம்,
தென்னக ரெயில்வே பாதுகாப்புபடை ஐ.ஜி.பார்கி நேற்று ராமேசுவரம் வந்தார். அங்கு ரெயில் நிலையம், காவல்நிலையங்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
புண்ணியதலாமான ராமேசுவரத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசு இந்த ஆண்டை பெண்கள் பாதுகாப்பு ஆண்டு என்று அறிவித்துள்ளது. அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. ரெயில்களில் கடத்தப்பட்ட ரூ.16 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் போதைபொருட்கள் பிடிபட்டுள்ளன. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. விரைவில் இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். ரெயில்வே பாதுகாப்புபடை காவல் நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.