தாம்பரம் சானடோரியம் சித்த மருத்துவமனையில் தேசிய கருத்தரங்கம்
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தாம்பரம்,
தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் உலகளாவிய ஒப்புதலுக்காக விஞ்ஞான ரீதியில் செல்லுபடியாகும் சித்த மருந்துகளை பிரபலப்படுத்துதல் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய ஆயுஷ் துறை மந்திரி ஸ்ரீபாத் யெசோ நாயக் கலந்து கொண்டார்.
கருத்தரங்கில், சித்த மருந்துகளில் உயிர் நானோ தொழில்நுட்பம், ஏ.எஸ்.யு. மருந்துகள் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள், இயற்கை எப்போதும் வாழ்க்கையை பாதுகாக் கிறது, மூலிகை மருந்துகள், சித்த மருந்துகளின் விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு, ஆதாரம் சார்ந்த சித்த மருத்துவம் சுருக்கமான நுண்ணறிவு, பாரம்பரிய இந்திய மதிப்பை மேம்படுத்துவதற்கு விஞ்ஞான மதிப்பீட்டின் முக்கியத்துவம் மருந்துகள் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றது.
இதில் உலக இந்து பொருளாதார மன்றத்தின் நிறுவனர் சுவாமி விக்யானந்தா, சென்னை சித்த தேசிய நிறுவன இயக்குனர் பானுமதி, சென்னை சித்த ஆராய்ச்சி மைய பொது இயக்குனர் டாக்டர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.