துறைமுக வழித்தடம் போரிவிலி வரை நீட்டிக்கப்படும் ரெயில்வே மந்திரி தகவல்
துறைமுக வழித்தடம் போரிவிலி வரை நீட்டிக்கப்படும் என ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறினார்.
மும்பை,

சேவை தொடக்கம்
மும்பை துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - அந்தேரி இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் இந்த ரெயில் சேவை தற்போது கோரேகாவ் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சேவையை நேற்று முன்தினம் இரவு ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார். சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் ரெயில் சேவை பயணிகளுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது. சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் இடையே தினமும் 49 சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதில் 42 சேவைகளை மத்திய ரெயில்வேயும், 9 சேவைகளை மேற்கு ரெயில்வேயும் இயக்க உள்ளது.
போரிவிலி வரை...
இந்தநிலையில் சி.எஸ்.எம்.டி. - கோரேகாவ் ரெயில் சேவையை தொடங்கி வைத்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது:-
துறைமுக வழித்தடம் கோரேகாவ் வரை வந்துவிட்டது. விரைவில் இது போரிவிலி வரை நீட்டிக்கப்படும். இதன் மூலம் பயணிகள் போரிவிலியில் இருந்து நேரடியாக சி.எஸ்.எம்.டி. செல்ல முடியும். மத்திய அரசு மும்பை புறநகர் ரெயில்சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சி.எஸ்.எம்.டி. - பன்வெல் ஆகாய ரெயில்தடம், பன்வெல் - விரார் ரெயில் தடம் போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ளோம். புதிய திட்டங்களுக்காக நடந்து வரும் பணிகளால் ஏற்படும் இடையூறுகளை பொது மக்கள் பொறுத்து கொள்ள வேண்டும். குறுகிய கால வலிகள் நீண்ட நாள் பலனை தரும்.
இவ்வாறு அவர் பேசி னார்.