பெரியகுளத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நியூட்ரினோ மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பெரியகுளத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-03-30 22:30 GMT
பெரியகுளம்,

போடி அருகே பொட்டிபுரத்தில் மத்திய அரசின் சார்பாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் மையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பெரியகுளம், புதிய பஸ் நிலைய பிரிவு அருகே நியூட்ரினோ மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஹமது தலைமை தாங்கினார். நகர் நலச்சங்க செயலாளர் அன்புக் கரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்