வியாபாரி வெட்டி கொல்லப்பட்ட வழக்கு: தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மிட்டாய் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த சண்முகவேல் மகன் சக்திவேல் (வயது 23). கடலை மிட்டாய் வியாபாரி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ்ராஜ் (22) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி சக்திவேல் தனது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அலெக்ஸ்ராஜ் மற்றும் சிலர் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சக்திவேலை வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ்ராஜ், அவருடைய தந்தை அமல்ராஜ் (49) உள்பட 11 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அலெக்ராஜ், அவருடைய தந்தை அமல்ராஜ், அண்ணன் அந்தோணி டேவிட் (24), மற்றும் ஆரோக்கிய தீபக் பெனிட்டோ (19), ஜான்விவேக் மணி (24) ஆகிய 5 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மூலம் கலெக்டர் டி.ஜி.வினய்க்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்பேரில் அவர்களை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் திண்டுக்கல் சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.