டிரைவரை தாக்கி லாரி கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

கவரைப்பேட்டை அருகே டிரைவரை தாக்கி லாரி கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2018-03-30 21:42 GMT
கும்மிடிப்பூண்டி,

கவரைப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4-ந்தேதி மினிலாரி டிரைவர் மணிகண்டன் (வயது 38) என்பவரை உருட்டுக்கட்டையால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் கடத்தினர். சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 13-ந்தேதி கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த மினிலாரியை மீட்டனர்.

தனிப்படை போலீஸ் விசாரணையின் அடிப்படையில், சோழவரம் பெரியகாலனியை சேர்ந்த கார்த்திக்(22), பிரசாந்த் (20) மற்றும் மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன்(23) ஆகியோரை கடந்த 21-ந்தேதி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரியில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களையும், பதிவு எண்ணை மாற்றி அவர்கள் பயன்படுத்தி வந்த கடத்தப்பட்ட சொகுசு கார் ஒன்றையும் போலீசார் மீட்டனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு தொடர்பாக சோழவரம் பெரியகாலனியை சேர்ந்த அருண் (22) என்பவரை கும்மிடிப்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்