திண்டிவனம்-நகரி அகல ரெயில்பாதை பணி; அதிகாரிகள் ஆய்வு
திண்டிவனம்-நகரி அகல ரெயில்பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த 16 கிராமங்கள் வழியாக திண்டிவனம்-நகரி புதிய அகல ரெயில்பாதை அமைய உள்ளது. இந்த புதிய ரெயில்பாதை பள்ளிப்பட்டு தாலுகா வழியாக நகரியை சென்றடையும். இதற்காக பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த 16 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கனவே பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த வங்கனூர், விளக்கணாம்பூடி, புதூர், வெள்ளாத்தூர் பகுதிகளில் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டன. நேற்று பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த கிராம பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி, தென்னிந்திய ரெயில்வே மூத்த பொறியாளர் (தாம்பரம்) கிரிராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
மேம்பால பணி
அவர்கள் பள்ளிப்பட்டு ஒன்றியத்தை சேர்ந்த திருமல்ராஜுப்பேட்டை, மோட்டூர், குமாரராஜுப்பேட்டை, பெருமாநெல்லூர், மேளப்பூடி, கொளத்தூர் போன்ற கிராமங்களில் நிலஆய்வு செய்தனர்.
மேலும் இந்த பகுதிகளில் நடைபெற்ற மேம்பால பணிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.