சேலம் அஸ்தம்பட்டி பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

சேலம் அஸ்தம்பட்டி கலைவாணர் தெருவில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது.;

Update: 2018-03-30 21:41 GMT
சேலம், 

பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. மேலும், திரளான பக்தர்கள் காவடி எடுத்து ஆடினர். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையடுத்து மாலையில் சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் உற்சவர் பாலசுப்பிரமணி சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், மணக்காடு, அஸ்தம்பட்டி, காந்திரோடு, ஜான்சன்பேட்டை, அன்புநகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. திருவீதி உலாவின்போது பொதுமக்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் காவடி எடுத்து ஆடியவாறு சென்றனர். பிறகு கோவிலுக்கு ஊர்வலம் சென்றவுடன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சரவணன் தலைமையில் நிர்வாகிகள் வசந்தகுமார், சாம்ராஜ், சண்முகவேல், அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்