சின்னப்பம்பட்டியில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

வெள்ளாளபுரம் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன், பாப்பாத்தி அம்மன், அர்ஜூணன், சக்தி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2018-03-30 21:41 GMT
சேலம்,

எடப்பாடி அருகே சின்னப்பம்பட்டி அடுத்துள்ள வெள்ளாளபுரம் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன், பாப்பாத்தி அம்மன், அர்ஜூணன், சக்தி கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜையும், விசேஷ யாகம் வளர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் தெளித்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேற்று காலையில் பெரியாண்டிச்சி அம்மனுக்கும், இதர தெய்வங்களான பாப்பாத்தி அம்மன், அர்ஜூணன், சக்தி ஆகிய சாமிகளுக்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து தீபாராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் சேலம் மாவட்டம் மட்டுமின்றி இதர மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தீர்த்தமலை பாலாஜி சிவாச்சாரியார், வடபழனி சீனிவாச சிவாச்சாரியார் ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தினர். சேலம் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் தலைமை நற்பணி மன்ற தலைவரும், பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தலைவருமான ஏ.எம்.எஸ்.ராஜ்குமார் தலைமையில் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கோவில் பூசாரி அர்ஜூணன், தர்மகர்த்தா சுந்தர்ராஜன், பெரியண்ணன், கோவில் நிர்வாகிகள் மாணிக்கம், அங்கமுத்து, குப்புசாமி, பச்சமுத்து, சேட்டு, மணி, பெரியதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. 

மேலும் செய்திகள்