மகாவீர்ஜெயந்தி அன்று மதுவிற்ற 16 பேர் கைது: 434 மதுபாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மகாவீர் ஜெயந்தி அன்று மது விற்பனை செய்த 16 பேர் கைது செய்யப்பட்டனர். 434 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-03-30 21:15 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தியையொட்டி அனைத்து மதுக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த மண்டபம் வளையர்வாடி வேல்முருகன்(வயது 48), இருட்டூருணி காடைசுப்பையா(42), உசிலங்காட்டு வலசை ஜோதிமணி(49), ரெகுநாதபுரம் சக்திபுரம் கணேஷ்குமார்(35), சந்திரன்(48), கமுதி அரிசிக்குழுதான் முத்துராமலிங்கம்(45), பந்தல்குடி நாகராஜ்(45), அச்சங்குளம் தங்கவேல்(47), புதுக்குடி மகாராஜா(46), வில்லாகுளம் வீரபாண்டி(43), மண்டபம் மறவர்தெரு கமாலுதீன்(37), வெட்டமனை சவுந்திரபாண்டி(50) ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 134 மதுபாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதேபோல, பரமக்குடி எமனேசுவரம் ஜீவாநகர் மதுக்கடை பகுதியில் கள்ளத்தமாக மதுவிற்பனை செய்த கமலாநேருநகர் ஹரிகிருஷ்ணன்(46), பரமக்குடி கீழபள்ளிவாசல் தெரு முத்துக் குமார்(42), ஜீவாநகர் பிரேம்குமார்(36), பரமக்குடி ராம கிருஷ்ணன் தெரு ஸ்ரீதரன்(55) ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரேநாளில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 16 பேர் கைதுசெய்யப்பட்டு இவர்களிடம் இருந்து 434 மதுபாட்டில்களும், ரொக்கம் ரூ.1,515 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக ஜீவாநகர் மாந்தோப்பு மதுக்கடை பார் உரிமையாளர் ஜெயபால் நாராயணன், விற்பனையாளர் பொன்னையாபுரம் கோவிந்தன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்