என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை: உடலை வாங்க மறுத்து கலெக்டர் பங்களா முன்பு உறவினர்கள் மறியல்
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் பங்களா முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,

கல்லூரி மாணவர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் கரீயூரை சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மகன் மனோஜ் (வயது 18). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சிவில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மனோஜ், விடுதியில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனோஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று மதியம் மனோஜின் உறவினர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மனோஜ் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யவேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள கலெக்டர் பங்களா முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.