மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் மோகன், செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், மாநில தலைவர் சண்முகராஜன் பங்கேற்று பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் தண்டபாணி, மாநில இணை செயலாளர் நந்தகுமார், தர்மபுரி மாவட்ட ஒன்றிய தலைவர் மணி, சத்துணவு பணியாளர் ஒன்றிய மாநில தலைவர் மாதப்பன் ஆகியோர் பேசினார்கள். இதில் கிருஷ்ணகிரி மாவட்ட துணைத்தலைலவர் ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட பிரசார செயலாளர் முத்து ராமன், மாவட்ட இணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்நேரு, வெங்கடாசலபதி, சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை விடுதி காவலர்கள், சமையலர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் காலி பணியிடங்களை நிரப்பிட மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது. கற்கும் பாரதம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. சம்பளத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். 1.4.2018 முதல் இத்திட்டம் தொடர்ந்து எந்த வித தங்குதடையின்றி நடத்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க தேர்தல்களில் உள்ள அரசியல் தலையீடுகளை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருகிற ஏப்ரல் 7-ந்தேதி குற்றாலத்தில் நடைபெறும் மாநில மத்திய செயற்குழு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து பெருமளவில் பங்கேற்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்ட தலைவராக கார்த்திகேயன், மாவட்ட செயலாளராக மோகன், மாவட்ட துணைத்தலைவராக பன்னீர்செல்வம், மாவட்ட இணை செயலாளர்களாக பாரதி, கோவர்தனன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மாநில தலைவர் சண்முகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழக மக்களின் ஒரு அங்கமாக உள்ள அரசு அலுவலர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளோம். எனவே, வருகிற ஏப்ரல் 7-ந்தேதி தென்காசியில் நடைபெறும் மத்திய கூட்டத்தில் முடிவு செய்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் நீடித்தால், இரண்டாம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து நிர்வாகிகள் கூடி முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.