மின்சார ரெயில் சேவை தொடங்கியது
திருச்சி- ஈரோடு இடையே மின்மயமாக்கப்பட்ட பாதையில் மின்சார என்ஜின் பொருத்தி பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.
கரூர்,
திருச்சி- ஈரோடு இடையே கரூர் வழியாக அகல ரெயில் பாதை மின்மயமாக்கல் பணி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. அதன்பின் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் முதலில் 6 சரக்கு ரெயில்களை இயக்கி சோதனை நடத்திய பின் அடுத்தகட்டமாக பயணிகள் ரெயில் சேவையை தொடங்க அறிவுறுத்தியிருந்தார். அதன்படி சரக்கு ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது. 6 சரக்கு ரெயில்கள் திருச்சி- ஈரோடு இடையே மின்சார என்ஜின் பொருத்தி வெற்றிகரமாக இயக்கப்பட்டன.
இதைதொடர்ந்து பயணிகள் ரெயிலில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்க முடிவு செய்யப்பட்டன. ஈரோட்டில் இருந்து நேற்று முன்தினம் மின்சார என்ஜின் பொருத்தி திருச்சிக்கு ரெயில் இயக்கப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக திருச்சி- ஈரோடு பயணிகள் ரெயில் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டன. ஈரோட்டில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட ரெயில் கரூர் ரெயில் நிலையத்திற்கு மாலை 6 மணி அளவில் வந்தடைந்தது. இனி திருச்சியில் இருந்து காலை புறப்படும் ரெயிலும், ஈரோட்டில் இருந்து மாலையில் புறப்படும் ரெயிலும் மின்சார என்ஜின் பொருத்தி இயக்கப்படும். மேலும் கரூர் வழியாக ஈரோடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் மின்சார என்ஜின் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த மின்சார என்ஜின் சேவையால் திருச்சி- ஈரோடு இடையே பயண நேரம் சற்று குறைகிறது. திருச்சி- ஈரோடு இடையே மின் மயமாக்கல் பாதையில் மின்சார என்ஜின் பொருத்திய பயணிகள் ரெயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.